பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கொள்வது ஒரு மரியாதையான வழக்கம். குமாரபாண்டியன் பூக்கூடையைக் கையில் வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுப்பதற்கு ஒரு குறும்பு செய்தான்.

“கனகமாலை! இந்த நாண நாடகங்களெல்லாம் என்னிடம் வேண்டாம்! நான் உனக்கு அந்நியனில்லை. என்னிடம் வாய் திறந்து பேசினாலொழிய, கூடை திரும்பக் கிடைக்காது!” என்றான்.

“ஆகா! அதற்கென்ன? இப்போது பூக்கூடையைத் திருப்பிக் கொடுங்கள், கோவிலுக்குப் போய்விட்டு அரண்மனைக்குத் திரும்பியதும் உங்களிடம் வட்டியும் முதலுமாகப் பேசித் தீர்த்து விடுகிறேன்” என்று தலையைக் குனிந்துகொண்டு வெட்கத்தோடு பதில் கூறினாள் அவள், குமாரபாண்டியன் சிரித்துக் கொண்டே பூக்கூடையை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவள்துள்ளிக் குதித்துப் பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். பல்லக்குப் புறப்பட்டது. அவர்கள் குதிரைகளும் அரச மாளிகையை நோக்கி

சக்கசேனாபதி இராசசிம்மனை நோக்கிக் கேட்டார். “இளவரசே, நீங்கள் முதன்முறையாக இலங்கைக்கு வந்திருந்தபோது இந்தப் பெண்ணுக்குச் சிறிது காலம் தமிழ் இலக்கியங்களைக் கற்பித்தீர்களே, நினைவிருக்கிறதா?”

“நன்றாக நினைவிருக்கிறது! ஆனால் இவ்வளவு மாறுதலை எதிர்பார்க்கவில்லை” என்றான் இராசசிம்மன்.

“பெண்கள் பருவ காலத்தில் கலியாண முருங்கை மரம் போல் மிக வேகமாக வளர்வது இயல்பு இளவரசே!” என்று கூறி நகைத்தார் சக்கசேனாபதி.

அரச மாளிகையின் வாசலில் காசிப மன்னர் பிறந்த நாளுக்குரிய வெள்ளணித் திருக்கோலத்துடன் அமைச்சர்கள் பிரதானிகள் புடைசூழ இராசசிம்மனைக் கோலாகலமாக வரவேற்றார். அவன் குதிரையிலிருந்து இறங்கியதுமே ஓடிவந்து அன்போடு அணைத்துத் தழுவிக் கொண்டார். ஈழ நாட்டு மன்னர். “இராசசிம்மா! நீ இன்று வந்தது மிகப் பொருத்தமான வரவு. என்னுடைய பாக்கியம்” என்று பெருமிதத்தோடு கூறினார். அவன் தங்குவதற்கான ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாகச் செய்யப்பட்டிருந்தன. அதன்பின் அன்று முழுதும்