பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

589


ஆகுமோ என்று பயந்துதான் தென்பாண்டி நாட்டு அரசுரிமைப் பொருள்களையும் உங்களுடன் இங்கேயே எடுத்துக்கொண்டு வந்து விடும்படி சக்கசேனாபதியிடம் நான் கூறியனுப்பினேன். வெற்றியோ, தோல்வியோ விளைவு எப்படி இருந்தாலும், நாம் நம்முடைய பொருள்களைத் தற்காப்பாக வைத்துக்கொண்டு விட வேண்டும்.” காசிப மன்னர் இப்படிக் கூறிக்கொண்டு வந்த போது குமாரபாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னான்: “என் உயிரினும் மேலான மதிப்புக்குரிய பொருளை நான் இன்னும் பாதுகாக்கவே இல்லை, காசிப மன்னரே! இந்தப் பொற் சிம்மாசனத்தையும், வீர வாளையும், சுந்தர முடியையும் பாதுகாப்பாக இங்கே கொண்டுவந்துவிட்டதற்காக நான் பெருமைப்பட்டுக் கொள்வது பெரிதன்று என் அன்னையைக் காப்பாற்ற வேண்டும். நான் பிறந்த குடியின் மானத்தையும் மதிப்பையும் காப்பாற்ற வேண்டும். அவைகளைக் காப்பாற்றிப் பாதுகாக்காத வரையில் நான் பெருமைப்படுவதற்கே தகுதியற்றவன்.”

“உன் மனக்குறை எனக்குப் புரிகிறது, இராசசிம்மா! இப்போது சொல்கிற வார்த்தைதான், நீ என்னை உறுதியாக நம்பலாம். தென்பாண்டி நாட்டுக்கோ, உன் அன்னைக்கோ ஒரு சிறு துன்பம் பகையரசர்களால் ஏற்படுகிறதென்று தெரிந்தாலும் உனக்கு உதவியாகச் சக்கசேனாபதியின் தலைமையில் ஈழ மண்டலப் பெரும்படை முழுவதையும் கடல்கடந்து அனுப்பி வைப்பதற்கு நான் எந்த விநாடியிலும் சித்தமாக இருக்கிறேன். அதற்காக நீ கவலைப்படாதே!” என்று உறுதியின் அழுத்தம் ஒலிக்கும் குரலில் காசிப மன்னர் மறுமொழி கூறியபோது குமாரபாண்டியனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. -

அதன் பின் இடையாற்றுமங்கலம் நம்பி, தளபதி வல்லாளதேவன் என்று தென் பாண்டி நாட்டு அரசியலில் தொடர்புடைய முக்கியமானவர்களையெல்லாம் பற்றிக் காசிப மன்னர் அவனிடம் விசாரித்தார். பேசிக்கொண்டிருக்கும் போது அவன் கையிலிருந்த வலம்புரிச்சங்கை அவரும் பார்த்தார். சிரித்துக்கொண்டே, அதைப்பற்றி ஆவலுடன் விசாரித்தார். அதைக் கையில் வாங்கிப் பார்த்து வியந்தார். வருகிற வழியில் ஒரு தீவில் விலைக்கு வாங்கியது என்பதற்கு மேல் அதிகமாக