பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

623


“நீல நிறத்தனவாய் நெய்யணிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே! கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியில் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியில் வேவன கண்டாலும் சால மயங்குவ தென் வாழி நெஞ்சே.” என்று அவர் கையறு நிலையாக ஒருவர் மரணத்துக்கு வருந்திப் பாடும் பாட்டு) பாடிய பாட்டு தன் நெஞ்சுக்கென்றே பாடியதுபோல் தோன்றியது இராசசிம்மனுக்கு .

குழியை மண்மூடிக்கொண்டது. உடல் மறைந்தது. எங்கோ சிறிது தூரம் நடந்துபோய் ஒரு சிறு அரசங்கன்றை வேரோடு பிடுங்கிவந்து அந்த இடத்தில் ஊன்றினார் புத்த பிட்சு பக்கத்தில் தேங்கியிருந்த தண்ணிரையும் வாரி இறைத்தார். பின்பு தலை நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்துச் சொன்னார்:- “நாம் போகலாம். ஒர் உயிரின் கதையை மண்ணுக்குள் பத்திரப்படுத்திவிட்டோம். இதற்கு முன்னும் இப்படி எத்தனையோ உயிர்களின் கதைகளை மண் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ ? மண்ணுக்கு ஒன்றும் புதிதில்லை.”

மூன்று பேரும் மெளனமாகத் திரும்பி நடந்தார்கள். இரவு தங்கியிருந்த கட்டிடத்தின் வாயிற்படிக்குப் பக்கத்தில் போனபோது முதல் நாளிரவு உறக்கம் வராமல் அந்தப் படியில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றித் தான் ைபத்தியக் காரத்தனமாகச் சிந்தித்த சிந்தனைகள் இராசசிம்மனுக்கு நினைவுக்கு வந்தன. முழுமையாம் முழுமை! எங்கே இருக்கிறது. அது? -

‘உங்கள் இருவருக்கும் குதிரைகள் இருக்கின்றன. நான் நடந்து போகவேண்டியவன். எனக்கு விடை கொடுங்கள் என்று அந்த இடத்துக்கு வந்ததும் புத்தபிட்சு விடைபெற்றுக் கொண்டார். பிரிந்து போகும்போது மீண்டும் அவர் இராசசிம்மன் முகத்தைப் பார்த்து, “தம்பி! கவலையை விடு; நீ அரசகுமாரன்; ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்லும் போரில்கூடக் கலங்காமலிருக்க வேண்டியது உனக்கு அறம்.