பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


நேரத்தில் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தயாராகட்டும்” என்று இரைந்து உத்தரவுகள் போட ஆரம்பித்தான். சக்கசேனாபதி இராசசிம்மனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார். “வந்ததும் வராததுமாக இப்படி உடனே திரும்பிப் போகிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். என் தாயையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டுமானால் நான் போய்த்தான் ஆகவேண்டும். நெருக்கடியான சமயம் இது. காசிப மன்னரிடம் சொல்லுங்கள். அவருடைய படை உதவியை தலைமை தாங்கி வந்தால்தான் எனக்கு நம்பிக்கை பிறக்கும். இருக்கிற நிலைமையைக் கேள்விப்பட்டால் நான் போவதற்குள்ளேயே அங்கே போர் மூண்டுவிடுமோ என்று பயமாயிருக்கிறது” என்று அவரிடம் உணர்ச்சிகரமாக வேண்டிக் கொண்டான் அவன். அதை கேட்டுக்கொண்டு அவர் கூறினார்-"இளவரசே! காசிப மன்னர்சுட நீங்கள் சொல்லாமலும் விடைபெற்றுக் கொள்ளாமலும் திரும்பிச் செல்வதை மன்னித்துவிடுவார். ஆனால் அந்தப் பெண் கனகமாலைதான் நான் திரும்பிச் சென்றதும், என்னைக் கேள்விகளை கேட்டுத் திணற அடிக்கப் போகிறாள். குறும்புக்காரப் பெண்ணாயிற்றே அவள்!”

“கனகமாலையிடமும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். பிழைத்துக் கிடந்தால் எல்லோரும் எல்லோரையும் மறுபடியும் சந்திப்போம்” என்று சொல்லும் போதே குரல் தழுதழுத்துக் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது இராசசிம்மனுக்கு.

கப்பல் புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக சேந்தன் வந்து தெரிவித்தான். சக்கசேனாபதி குமார பாண்டியனின் காதருகில் ஏதோ சொல்லிச் சற்று ஒதுக்குப் புறமாக ஒரு மூலைக்கு அழைத்துக்கொண்டு போனார். “இளவரசே! இவர்களோடு கப்பலில் வந்து தப்பி ஓடிப்போன வாலிபன் யாரென்று கொஞ்ச நேரத்துக்குமுன் இடையாற்று மங்கலத்து அம்மணியிடம் கேட்டேன். அது சேந்தனுக்குத்தான் தெரியுமென்று வெறுப்போடு பதில் சொல்லிவிட்டார்கள். நீங்கள் அதுபற்றிச் சேந்தனிடம் கேட்டீர்களா?” என்று கேட்ட அவருக்கு “நான் சேந்தனைக் கேட்ட முதல் கேள்வியே அதுதான். ஆனால்