பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


எண்ணிக்கொண்டு “ஆகா! நான் தாராளமாக உன்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வரத் தயாராயிருக்கிறேன்! கப்பல் விழிஞத்தை அடைகிற வரையில் நீயும் சேந்தனும் எதை எதைச் சொல்கிறீர்களோ அதையெல்லாம் அப்படியே கேட்டு விடுவதென்று இருக்கிறேன். விழிஞத்தை அடைந்து அரண்மனைக்குப் போன பின்புதான் என் தாயாரும் மகாமண்டலேசுவரரும் சொல்கிற படி கேட்கவேண்டும் “ என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கித் தளத்துக்குப் போவதற்காக நடந்தான் இராசசிம்மன். குழல்வாய்மொழியும், சேந்தனும் அவன் பின்னால் சென்றார்கள்.

“அம்மணி! சற்றுமுன் குமாரபாண்டியரிடம் தங்கள் தந்தையின் அவசரச் செய்தியைக் கூறுவதற்காக அழைத்துப் போனபோது தங்களை அறைக்குள் விடாமல் கதவைத் தாழிட்டதற்கு மன்னிக்க வேண்டும். தங்களை அவமானப் படுத்த வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. தங்கள் தந்தையின் கட்டளைக்கு மரியாதை செய்யவே அப்படிச் செய்தேன். தாம் கூறியனுப்பிய செய்தியை இளவரசரிடம் நான் சொல்லும்போது எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் உடனிருக்கலாகாதென்பது மகாமண்டலேசுவரரின் கட்டளை” என்று போகும்போது குழல்வாய்மொழியின் அருகில் நடந்து கொண்டே கூறினான் சேந்தன்.

குழல்வாய்மொழி அதற்கு ஒன்றும் பதிலே சொல்ல வில்லை. வேகமாகத் தன் அறைக்குள் போய் ஆண்கள் அணிந்து கொள்ளக்கூடிய அங்கி, தலைப்பாகை முதலிய சில உடைகளை எடுத்துக்கொண்டு வந்து குமாரபாண்டியனுக்கு முன்னால் போட்டாள். சேந்தனும் அருகில் நின்றான்.

அவற்றைப் பார்த்துவிட்டு, இவை யாருடையவை?” என்று கேட்டான் இராசசிம்மன்.

“எங்கள் கப்பலில் எங்களுக்குத் தெரியாமல் மாறுவேடம் போட்டுக்கொண்டு ஏறிக் கடைசியில் எங்களையே ஏமாற்றி விட்டுப்போன ஒரு நயவஞ்சகப் பெண்ணினுடையவை இவை. அந்தப் பெண் இந்த வேடத்தில் உங்களைத்தான் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள். இதற்குள் உங்களைச் சந்தித்தாலும்