பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


ஆனால் மழுங்காத கூர்மை பெற்ற அந்த அறிவின் செல்வர் எந்தெந்த விளைவுகளைத் தடுப்பதற்காக குமார பாண்டியனிடம் அந்த வாக்குறுதிகளைப் பெற்றாரோ, அந்த விளைவுகள் அப்போதே அங்கேயே அவருக்கருகில் நின்றன என்பது பின்புதான் அவருடைய அறிவுக்கே எட்டியது. தாமும், குமாரபாண்டியனும் எந்தப் பாறையருகில் நின்று பேச நேர்ந்ததோ, அதன் மறைவில் இருளில் தளபதியும், குழைக்காதனும் நின்றிருப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். திடீரென்று தமது மகுடத்தில் வந்து விழுந்து கீழே தள்ளிய கல் அவரை அப்படி எதிர்பார்த்துச் சிந்திக்க வைத்தது. அந்த இடத்திலேயே அந்த கணத்திலேயே அப்படி எறிந்துவிட்டு ஒடும் எதிரிகள் யார் என்று பிடித்துக்கொணர்ந்து பார்த்துத் தம்முடைய அவமானத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்பவில்லை அவர். அதனால்தான் பிடிப்பதற்காக ஒடிய சேந்தனையும், குமார பாண்டியனையும் கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினார் அவர் ஊழிபெயரினும் தாம் பெயராத சான்றாண்மையோடு சிரித்துக் கொண்டே கீழே விழுந்த மகுடத்தை எடுத்துக் கொள்ள அவரால்தான் முடியும், முடிந்தது. வெளியில் உணர்ச்சிகளைக் காட்டாமல் நடந்து கொண்டாலும் இதயத்துக்கும் இதயமான நுண்ணுணர்வின் பிறப்பிடத்தில் அந்தக் கல் விழுந்த நினைவு உரசியபோது ஒரு கனற்பொறி எழுந்தது. உள்ளே குமுறலும் வெளியே பரம சாந்தமுமாக நடந்து கொண்டார்.

இத்தனை காலமாகக் கண்பார்வையையும், பேச்சையும் கொண்டு ஒரு தேசத்தையே ஆட்டி வைத்த என் அறிவின் கெளரவம் இந்தக் கல்லினால் விழுந்துவிட்டதா? ஏன் இப்படி என் மனம் கலங்குகிறது? எத்தனைதான் மேதையாக இருந்தபோதிலும் நல்வினைப் பயன் தீர்கிற காலம் வரும்போது ஒரு மனிதனுடைய அறிவு பயனற்றுப் போகும் என்கிறமாதிரி நிலையில் வந்து விட்டேனோ நான்? என அவருடைய மனத்தில் உணர்ச்சிகள் குமுறின. அப்போது இருளில் விளக்கு அண்ைந்ததும் பயந்து அழுகிற குழந்தையைப்போல் முதல் முதலாக அவருடைய மனம் தன்னையும் தன் வினைகளின் பயனையும் எண்ணி உள் முகமாகத் திரும்பிப்பார்த்தது. ஒரு