பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

735


சேர்த்துவிடச் சொல்லி ஓர் ஒலையை என்னிடம் அளித்துச் சென்றார்” என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலிருந்து அந்த ஒலையை எடுத்தான் சேந்தன். துக்கம் அவன் குரலையே மாற்றியிருந்தது.


24. சிதைந்த கனவுகள்

அரண்மனைக் கோட்டைக் கதவுகள் எல்லாம் மூடப் பட்டுவிட்டன. வெளிப்புறம் பராந்தகப் பெரு வாயிலுக்கு அப்பால் கலகக் கூட்டம் வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருந்தது. கலகக்காரர்களின் வெறிக் கூப்பாடுகள் பயங்கரமாக ஒலித்தன. சேந்தனையும், குழல்வாய் மொழியையும் வெளியே அனுப்பாவிட்டால் கதவை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்துவிடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இத்தகைய பயங்கரமான சூழ்நிலை வெளியே நிலவிக் கொண்டிருக்கும்போதுதான் சேந்தன் தான் கொண்டு வந்திருந்த மகாமண்டலேசுவரரின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்ட ஒலைச் சுருளை விரித்து மகாராணியிடம் கொடுத்தான்.

“இராசசிம்மா! இதைப் படித்துச் சொல்” என்று குமாரபாண்டியனிடம் அதைக் கொடுத்தார் மகாராணி.துக்கம் அடைக்கும் நலிந்த குரலும், நீரரும்பும் கண்களுமாக அவர் அப்போது தோற்றமளித்த நிலை எல்லோருடைய உள்ளங்களையும் உருக்கியது. சேந்தனும் கண்கலங்கிப் போய் வாட்டத்தோடு காட்சியளித்தான்.குழல்வாய்மொழி தலை நிமி ரவே இல்லை. கண்கள் சிவந்து முகம் வீங்கி அழுதழுது சோகம் பதிந்த கோலத்தில் நின்றாள் அவள். மற்றவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியன் எல்லோரும் கேட்கும்படியாக மகாமண்டலேசுவரரின் இறுதித் திருமுக ஒலையை இரைந்து படித்தான்.

“அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மகாராணி வானவன் மாதேவிக்கு, இடையாற்றுமங்கலம் நம்பி இறுதியாக எழுதும்