பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
தலையாலங்கானத்துப் பெரும் போர்

படைத்த படைத்தலைவர்கள் கட்டுத்திட்டமாகப் படை வீரர்களை நடத்திச் சென்றனர். பாண்டி நாட்டுப் படையின் ஒழுங்கு முறைக்கு முன் எந்த நாட்டுப் படையின் ஒழுங்கு முறையும் நில்லாது. தன் படைப் பலமும் பகைவருடைய வலியின்மையும் பாண்டியனுக்குத் துணையாயின.

பகை மன்னர்கள் பாண்டியன் இளம் பருவத்தினன் என்பதை எண்ணினார்களே யன்றிப் படையை இயக்கிய தலைவர்கள் பல போரில் வெற்றி பெற்றுக் கைதேர்ந்தவர்கள் என்பதை எண்ணவில்லை.

பாண்டி நாட்டின் எல்லையில் சிறிது நேரந்தான் போர் நடைபெற்றது. பகைப் படை மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்தது. சோழ நாட்டின் எல்லைக்குள் போர் நடக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல நகர்ந்தது பகைப்படை; பின்பு வேகமாகவும் சென்றது. கடைசியில் தலையாலங்கானம்* என்னும் இடத்தில் நின்று போர் செய்தது. அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படை வந்துவிட்டமையால் எளிதில் சுற்றி வளைத்துத் தொலைத்துவிடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கினான்.

போர் கடுமையாக மூண்டது. இரு பெரு வேந்தரும் ஐம்பெரு வேளிரும் தம் தம் படைக்குத் தலைவராக நின்று முடுக்கினர். பாண்டி நாட்டுப் படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்


  • குடவாயிலுக்கு அருகில் தலையாலங்காடு என்ற பெயரோடு விளங்கும் சிவத்தலமே இது.