பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் 6: இக்குமுறல் மக்கள் இவன்பால் கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகின்றது. இதனைத் தொடர்ந்து அவர்கள், மின்னொளியே தன்தலையில் உன்னதான "முடி”வைத்தான், முழக்குகின்றான் அன்னோன் வாழ்வின் முடிவைத்தான் முழக்குகின்றான் முரசறைந்தே" என்று பேசிய பேச்சில் அவர்கள் அன்னத்தின்பால் கொண்ட பரிவையும் காண முடிகின்றது. நரிக்கண்ணனின் அழிவை 'அன்னோன் வாழ்வின் முடிவைத்தான் முழக்குகின்றான்” என்ற தொடர் முற்கூறுவதாகவும் (Frediction) அமைகின்றது. பாண்டியன் பரிசைத் தேடும் அரசனின் ஆணை முரசறைதல் மூலம் அறிவிக்கப்படுகின்றது. முழக்கத்தைக் கேட்ட ஊர்ப்பெரு மக்களில் சிலர் “நரிக்கண்ணனின் மகனாகிய "கொழுக்கட்டை” அன்னத்தை மணந்து கொள்வான்; தான் எடுத்துவைத்திருக்கும் பேழையைக் கொடுத்து விடுவான். வழக்கத்தை விடுவானோ? வஞ்சம் சூழ்ச்சி வற்றாத கடலன்றோ?. இருக்கும் பெண்ணை இழுக்கத்தான் இச்சூழ்ச்சி செய்தான்' என்று பேசுவார்கள். இன்னும் "பேழை இருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். முத்தன்ன வெண்ணகையாள் திருமணம் என்று கூடுமோ?” என்று சிலர் தம் கவலை தெரிவிப்பர். மேலும் சிலர் பல்வேறு விதமாகப் பேசுவார்கள். தென்மலையில் வாழும் கள்ளர் கைக்குப் போயிருக்கலாம் என்றும், பிள்ளைகள் அரண்மனையில் விளையாடுங்கால் பேழையினை எடுத்தும் போயிருப்பர் என்றும், அவர்கள் அப்பன் அதனைக் கொள்ளையடித்துக் கொள்வதுடன், அன்னமெனும் “கோக்காத முத்தை'யும் கையகப்படுத்திக் கொள்வான் என்றும் பேசுவர். அமைச்சனும் ஆளில்லா நேரத்தில் அடித்துக்கொண்டு போயிருக்கலாம் என்றும் சிலர் அறைவர். ஊர்வாயை மூட உலை மூடி இருக்கமுடியுமா? பேழை கிடைப்பதில் பெருந்தாமதம் ஏற்படுகின்றது. ஊர்மக்கள் பேச்சு ஒய்ந்தபாடில்லை. அவர்கள், 12. இயல்- 23:2- பக். 44 13. இயல்- 44:1- பக். 73