பக்கம்:பாண்டியன் பரிசு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிஞர் சொல்லுகிறார்


உரை நடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த  சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்து விடலாம்.

"பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
  சிலசொல்லல் தேற்றா தவர்"

என்றார் வள்ளுவர்.
முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்; மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும்எனத் தோன்றவே, 
ஏறக்குறைய நானுாறு எண் சீர் விருத்தங்களால்  எழுதி முடித்தேன்.

தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள் இச்செய்யுளின் பொருளை எனின் - அதுதான் 
எனக்குமகிழ்ச்சி யூட்டுவது!

எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத்  தமிழின் பயனைத்  தமிழர்க்கு ஆக்கமுடியும் என்பது
என் அசைக்க முடியாத நம்பிக்கை.

என் நூல்கை முறையே நல்ல முறையில் அச்சிட்டு வெளியிட்டு வரும் செந்தமிழ் நிலையத்தார் பரிசை வெளியிட்டதற்காக ஒரு முறை நன்றி கூறுகிறேன்.

வாழிய செந்தமிழ் நிலையம்!

— பாரதிதாசன்.