பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்
91
மதுரை நகர்ப் புலவர்களோடு அளவளாவிச் சில நாள் தங்கியிருந்தனர்.
இவ்வாறு இருக்கையில், இரண்டொரு முறை: அரண்மனைக்குப் போய் அரசனைக் கண்டனர். அவன் பரிசில் வழங்காமல் இன்னும் சில நாள் பொறுத்திருக்கவெனக் கூறி அனுப்பினன். புலவர் பொறுத்தும் பொறுத்துப் பார்த்தனர். பரிசல் வருகின்ற வழியைக் காணவில்லை. அரசன் இல்லையென்று சொல்ல மாட்டாமல் இப்படிச் சொல்லுன்றானோ என்று அவர்க்குத் தோன்றியது. மதுரை நகர்ப் புலவர்க்கும் அரசன் இவ்வாறு இப்பெரும்புலவரை மனம் வருந்தச் செய்வது அதிசயம் விளைத்தது. பாண்டியன் மனமே மாறியிருக்கும்பொழுது எவர் வருத்தம் என்ன செய்யும் ? ஆவூர் மூலங்கிழார் பொறுக்க வியன்றவரை பொறுத்தார். இதுதான் நடை முறையென்று அரண்மனைக்குப் போனார். அப்பொழுதும் ௮ரசன் அவர்க்குப் பரிசில் தந்து விடை கொடுக்கும் கருத்தடையனாய் இருக்கவில்லை. ஆகையால், அவர் அரசனைப் பார்த்துப்பின் வருமாறு பேசினர் :
“அரச பறிசில் வாழ்நர் என்ற இறப்புப் பெயர் புலவர்க்கு உரியதேயாயினும், வறுமையால் மிகவும் வாடும் காலத்தும், தமது மானம் இழந்து வரிசை தப்பி வாழ்ந்த புலவர் எவரும் இலர், யாம் வெயில் என்றும் பனியென்றும் பாராது பல முறை நடந்து நின்னிடம் வந்து பரிசில் பெறக்கருதிச் காத்திருந்தோம். எமது வறுமையோ கல்லாற் சமைந்ததுபோல உறுதியாய் இருக்கிறது, காற்று உட்புகாது மறைக்திருக்க வேண்டுமளவு அமைந்த எமது சிறு குடிலில்