பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்

I

துரை மாநகரம்-வானவர் உறையும் மதுரை மாநகரம் -உலகுபுரந்து ஊட்டும் உயர்பேரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையையென்ற பொய்யாக் குலக்கொடியால் வளம்பெற்ற மதுரை வளநகரம் -- பொதியிற்றென்றலாற் புகழ் பெறும் நகரம் -- நுதல் விழி நாட்டத்திறையோன் கோயில், உவணச் சேவல் உயர்த்தோன் நியமம் மேழிவலனுயர்த்தவெள்ளை நகரம்-கோழிச்சேவற் கொடியோன் கோட்டம், அறவோர் பள்ளி மன்னவன் கோயில் ஆதிய பல வகைச் செயற்கையழகுகளையுடைய திருவாலவாய்ப் பெருநகரம். அந்நகரின் இயற்கையழகு அருங்கவிப் புலவர்க்கே அளந்துரைக்கலாந் தகையதாம்.

புறத்திருந்து நகரத்துள் நுழையுங்காற் காணுங் காட்சி இன்னது என இளங்கோவடிகள் கூறியவாறு எடுத்துரைத்தல் எளிதன்றாம். கடி மரம் ஓங்கி வளர்ந்திருக்கும் காவற் காட்டைக் கடந்து, நீர் நிரம்பிய அகழியை நெருங்குவோம். உரியோர்க்குப் புலப்படவும் aயலோர்க்குப்புலப்படாதிருக்கவும் ஏற்றவாறு அமைக்கப்பெற்றிருக்கும் நுழைவழிகளால் அகழியைக்கடந்து அரணினைக்குறுகலாம். அரணின் உயர்ச்சியும் அளவும்