உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

125

நடுங்கி நின்று அழும். அவற்றின் கழுத்தில் உள்ள பெரிய மணிகள் விழுகின்றன. இவற்றால் இங்கு ஏதோ பெருத்த தீங்கு ஒன்று விளையும் என்று தோன்றுகின்றது. ஆயினும், மகளே, அஞ்சாதே. முற்காலத்திலே ஆயர் பாடியில் எரு மன்றத்திலே மாயவனும் பலராமனும் ஆடிய பால சரித நாடகங்கள் பல உள. அவற்றுள் நப்பின்னைப் பிராட்டியோடு கண்ணபிரான் கை கோத்து ஆடிய குரவைக் கூத்தை இக்கண்ணகி கண்டு நிற்க யாம் ஆடக்கடவோம் இக்கறவையும் கன்றும் பிணி நீங்குக,” எனக் கூறினள்.

மாதரியின் விருப்பிற் கிணங்க அவ்வாய்ப்பாடிப் பெண்டிர் குரவைக் கூத்து ஆடத் தொடங்கினர். ஏழு இளம் பெண்களை ஏழு இசைகளின் இயைபு நிகர்ப்ப ஒழுங்குற நிறுத்திக் குரவைக்கூத்துத் தொடங்கப்பெற்றது. ஏழு மகளிரும் கைகோத்து முறைவழுவாது பாடியாடினர். பாண்டியன் சோழன் சேரன் என்ற மூவேந்தரையும் திருமாலுக்கு நிகராக வைத்துச் சில பாடல்கள் பாடினர். திருமாலுக்குத் தோத்திரமாகச் சில பாடல்கள் பாடினர். தெய்வத் தோத்திரம் செய்வதால் தமக்கு எதிர் காலத்தில் வரலாகும் என்று எண்ணும் தீமையைப் போக்கிக்கொள்ளலாம் என்பது அவ்வாய் மகளிர் கொள்கையாதலால், அவ்வாறு செய்தனர். இறுதியிற் பாண்டியனை மனமார வாழ்த்திக் குரவை நாடகத்தை ஆடி நிறைவேற்றினர்.

மாதரி இங்ஙனம் இளம்பெண்கள் ஆடிய குரவைக் கூத்து முடிந்தவளவிலே, நீர்ப் பெருக்கு மிக்க வையை யாற்றின் கரையை யடைந்து, திருமாலைத் தியா-