பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பாண்டிய மன்னர்

வரவு நல்வரவாகுக. செல்வத்துட் செல்வமாகிய செவிச் செல்வத்தை நும்போன்ற பெரியாரிடமன்றி வேறு எங்குப் பெறலாகும்? தமிழணங்கின் தவப்பேறே, வரந்தர வந்த செல்வமே போல வந்த நுமக்கு என்ன உபசாரம் கூற வல்லோம்?” என்றான்.

காரி கிழார் வணக்க வொடுக்கமாகத் தம் ஆதனத்தருகில் எழுந்து நின்று கொண்டு, இரு கரங்கூப்பி அர சனைவணங்கி, “மன்னர் ஏறே, செந்தமிழ்ப்புலவர் செஞ்சொலமுதுக்குச் செவியினை நல்கிய செழியர் பிரானே, பொதியப்பொருப்பின் புகழொடுபொருந்திய புண்ணியர் குடியிற் பூத்த புரவல, இரவலராகிய எம் போல்வார்க்குப் புரவலன் எனவும் தமிழணங்கின் திருத்தளியை அமைத்தோர் வழித்தோன்றல் எனவும் வேள்விகள் பல செய்து விண்ணவரையும் மண்ணவரையும் மகிழ். வித்தவன் எனவும் பிறராற் கேள்வியுற்று நேரிற் கண்டு இன்புறலாமென அணுகினேம். தழிழ்ப் பணி பூண்ட பெரியார் பலர் பிறந்த குடியிற் பிறந்துளோம் என்றதொரு பெருமை எமதாம். அத்தகையார் பலரை ஆதரித்தார் வழி வந்த பெருமை உனதாம். ஆகையால், இறைவன் திருவருள் கூட்டி வைக்க இங்கடைந்தோம். நாட்டின் நலத்தின்பொருட்டும் உலக வாழ்வின் உயர்ச்சியின் பொருட்டும் அறம் வளர்ந்து மறம் தள ரும்பொருட்டும் நினது செங்கோல் செழிப்பதாக,” என்று கூறி, ஆதனத்தமர்ந்தார்.

பாண்டியன் புலவரை நோக்கி, “பெரியீர், நுமது வாழ்த்துரை இறைவனருளால் இந்நாட்டுக்கு நன்மை பெருக அமைவதால், அஃது எந்நாட்டுக்கும் நன்மை