பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

49

முன் சினம் மாறுகவென அமைக்கப்பட்டது. ‘வென்றி யெல்லாம் வென்று அகத்தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி,’ என்று விளித்து, அகம்புற வெற்றி இரண்டும் அமைத்துக்குண மாண்பும் புகழப்பட்டது. நீடுவாழ்கவென வாழ்த்தும் கருத்தால் சூரிய சந்திரர் உள்ள காலம் எல்லாம் உலகமுள்ள காலம் எல்லாம் உயிர்கள் உள்ள காலம் எல்லாம் அறமும் அருளும நெறியும் உள்ளகாலம் எல்லாம் வாழ்கவென வாழ்த்தியாவாறாம். இவற்றில் நான்மறை முனிவர் ஏந்து கையெதிரே இறைஞ்சுக வென்பதால் அறமும், நாடு சுடு கமழ் புகையால் வாடுக நின் கண்ணியென்பதாற் பொருளும், மங்கையர் துனித்த வாண்முகத்தெதிரே செலியர் நின் வெகுளி யென்பதால் இன்பமும், முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்குப் பணியியர் என்பதால் வீடும் கூறப்பட்டன.

“அரசரேறே, இவ்வாறு நாற்பொருள்களையும் விளங்க வைக்கும் இச்செய்யுளையும் நின் புகழோடு இணைத்து மார்பகத் தில் அணிந்து கொண்டு எமை ஆதரிக்க வேண்டுகிறேம்.”

காரி கிழாரது பிரசங்காமுதத்தைச் செவி வாயாக உள்ளம் களனாகப் பருகிய புரவலனும் பிற புலவர்களும் ஆனந்த மேலீட்டால் சிறிது பொழுது பரவசப்பட்டு மௌனமாயிருந்தனர். பிறகு அரசவைப் புலவர் தலைவர் எழுந்து நின்று, “மன்னர் பிரானே, புலவருட் புலவரே, இவ்வருங்கருத்துக்களை யமைத்துச் சின்மென் மொழியாற் செய்யுள் செய்து அரசர்க்கு அறிவுரை அறவுரை வாழ்த்துரை கூறிய இவரே புலவர்! இவர் வாய்ப்பிறந்த இம்மொழி யமுதமே செய்யுள்! இவரது இயல்பை அளந்தறிந்து பரிசில் தரவல்ல பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனே புரவலன், வேறு யாம் கூற என்னவுளது ? உம்ப-

4