பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

III

போர் என்பது இருவகையாம். அவற்றை அறப்போர் மறப் போர் என்பர். பாண்டியன் நன்மாறன் செய்த போர் எவ்வகையைச் சேர்ந்தது என்பது ஆராய்ச்சிக்குரியது. அவன் தன் நாடு கல்வி செல்வங்களாற் பெருகவும், நில வளமும் புனல் வளமும் பெற்றோங்கவும் வேண்டுவன செய்யக் கடமைப்பட்டவனே. ஆயின், அதன்பொருட்டு அயலரசர்களோடு போர் இயற்றி, அவர்கள் தலைமையைக் குறைக்க வேண்டும் என்ற அவசியம் என்ன? எவரேயாயினும், அவரவர் தத்தம் உரிமைகளைப் போற்றி அமைதியோடு வாழ்க என்று விட்டுவிடுவதன்றோ அறமாவது என்று கேட்க இடம் உண்டு. சேர சோழரோடு நடந்த சம்பாஷணையில் இக் கேள்விகளுக்கு ஒருவாறு விடை கூறப்பட்டுள்ளதாயினும், இங்கும் இரண்டொரு சமாதானங்கள் கூறப் படும்:

பாரத பூமி பெரியதொரு கண்டம். அதில் உள்ள பேரரசுகளே ஐம்பத்தாறு என்பர். அவற்றுள் அடங்கிய சிற்றரசுகள் நூற்றுக் கணக்காக இருக்கும். வேளிரும் பிற குறுநில மன்னரும் இத்துணையர் என எண்ணல் எளிதன்று. ஒவ்வோரரசும் தனித்தனி தலைமை பூண்பது அவ்வவ்வரசுக்குப் பெருமையை விளைக்குமேயாயினும், அவை ஒன்றோடொன்று போர்