பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

11


2. விபத்தும் விளக்கமும்

விபத்துக்கான காரணங்கள்

விபத்து என்பது ஏதோ விதி வசத்தினால் நேர்வது அல்ல. பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணம், யாரோ ஒருவரின் அஜாக்கிரதை அல்லது தேவையான பாதுகாப்பு முறைகளை அனுசரிக்காமை, அல்லது தேவையற்ற அபாயகரமான முறைகளில் இறங்குவது அல்லது தெரிந்தே பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது என்பதுதான்.

ஆகவே, விபத்தின் மூலகாரணங்களை இனி ஆராய்வோம்.

1. அறியாமை

ஒரு காரியத்தைச் செய்யும்போது, அந்தக் காரியத்தின் அடிப்படை தன்மை என்ன? அதற்குரிய பாதுகாப்பு விதிமுறை என்ன? எந்த வழிமுறை எப்படி ஆபத்துக்குள் சிக்கவைக்கும்? ஏன் நாம் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்றெல்லாம் சுய சிந்தனை இல்லாமல், ஆராய்ந்து பார்க்காமல், தான் கண்டதே காட்சி,