பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


வழிகளையும் இனி காண்போம்.



4. சாலையில் பாதுகாப்பு

1. சாலை விபத்துக்குரிய காரணங்கள்

சாலைகளில் நடந்து செல்வது அல்லது பயணம் போவது என்பதெல்லாம் இன்றைக்குப் பெரும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன.

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை; விரைந்து செல்லும் அவற்றின் வேகத்திற்குப் போதாத நெருக்கடி நிறைந்த சாலைகள்; மேடும் பள்ளமும் சூழ்ந்த சாலைகளின் அமைப்பு; இவற்றினூடே தெரிந்தோ தெரியாமலோ செல்கின்ற பாதசாரிகள்; மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், சைக்கிள் ரிக்‌ஷா மற்றும் கார், லாரி போன்றவைகள் அடிக்கடி மோதிக்கொள்கின்ற நிகழ்ச்சிகள் எல்லாமே, இன்று பாதுகாப்புக் கல்வியின் தேவையை மேலும் விரிவுபடுத்துகின்றன.

பொது மக்களுக்கு இந்தப் பாதுகாப்புக்குரிய விதிமுறைகள் தெரியவில்லை, வாகன ஓட்டிகளுக்கு வேகத்தைக் குறைத்துக் கொண்டு போகமுடியாத அவசர நிலை, இக்கட்டான சூழ்நிலையில் அபாய நேரத்தில் மதியூகத்துடன் நடந்து கொள்ளத் தெரியாத அச்ச நிலை, எப்பொழுது வாகனத்தை வேகமாக ஓட்டுவது,