பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



50

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


2. விஷ மருந்துகளைத் தனியே ஒரிடத்தில் பத்திரமாக வைத்தல், அவை குழந்தைகளுக்கு கைக் கெட்டாத உயரத்தில் வைப்பது நல்லது.

3. வசதியிருந்தால், விஷ மருந்துகளைத் தனியே பூட்டி வைத்துவிடலாம். அதை பெரியவர்கள் மட்டுமே எடுத்து, கையாள வேண்டும்.

4. வீட்டில் உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எவை விஷ மருந்துகள் என்பது நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். முடிந்தால், அதில் பெயர் எழுதி, தெரியும்படி ஒட்டி வைத்திருக்கலாம்.

5. திருட்டுத்தனமாகக் குழந்தைகள் திண்பண்டம் எடுப்பது போன்ற காரியங்களைச் செய்யும்பொழுது தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து விடுகின்றன.

6. மருந்துகூட, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றிருக்கும் காலக் குறிப்பை தெரிந்துதான் சாப்பிடவேண்டும்.

7. தூக்கக் கலக்கத்தில் எதையும் உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளக் கூடாது.

8. உணவைக் கூட, குறித்த காலத்திற்குமேல் பாதுகாத்து சாப்பிடுவதால், அது விஷத்தன்மை உடையதாக மாறிவிடுகிறது.

9. சாப்பிடும் உணவுப் பொருட்களைத் திறந்து வைத்திருப்பதால், பல்லி, அரணை போன்ற ஐந்துக்கள் விழுந்து, நச்சுத்தன்மையை உண்டாக்கி விடுகின்றன.