பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

5

முன்னுரை

உலகில் வாழும் ஒவ்வொருவரும் இன்பமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். அதிலும், துன்பம் கலவாத இன்பமே வேண்டும்' என்று திரும்பத் திரும்ப அதே நினைவுடன் தான் வாழ்கின்றார்கள்.

யுத்தகளம் போல நிகழ்ச்சிகள் நடைபெறும் வாழ்க்கையில், பத்திரமாக வாழவேண்டும் என்பதுவே, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடமாக அமைந்திருக்கிறது.

சில சமயங்களில் வருத்தப்படுவதும், சிந்தனை இருந்தால் திருத்திக் கொள்வதுமாகவே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதாவது வேறுவழியில்லை என்பதால்.

பத்திரமாக, பாதுகாப்பாக வாழக் கற்றுக் கொள்வது, துன்பம் வராமல் தடுக்கவும், வந்தால் தவிர்க்கவும், வந்தபின் தடுமாற்றம் இல்லாமல் எதிர் கொள்ளவும், புதிரைவிடுவித்துக் கொள்ளவும் கூடிய இனிய வழிகளை, துணையாகும் நினைவுகளைத் தருவதற்காகவே.

அதனால், எதுவும் நம்மை இம்சைப் படுத்துவதில்லை மாறாக நம்மை இதப்படுத்துகிறது. இனிய வாழ்வுக்குப் பதப்படுத்துகிறது. அனுதினம் நம்மை சுகப்படுத்துகிறது.

இத்தகைய அதிய வழிகளை இளைஞர்கள் கற்றுக் கொண்டு வாழவேண்டும் என்பது கல்வியாளர்களின் விருப்பமாகும். மாணவ மணிகள் மனதிலே, இந்தக் கொள்கைகள் பதிய வேண்டும் என்பது அவர்களின் மாறத