பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு கேட்காது, கொடுக்கும் 7 அவளுக்குக் காப்பிதான் தோன்றியிருக்க வேண்டும். ஒரு டபரா - தம்ளரை எடுத்துக்கொண்டாள். ஒரு கையில் ரிnவரும், மறு கையில் காப்பித் தம்ளருமாக சுவையும் பதற்ற மும் சூழ, அவள் ஹலோ!' என்றாள். யார். சேட்ஜியா?... ஐயா அங்கே செளகார்ப்பேட்டையண்டைதான் புறப்பட்டு வந்தாங்க... ஆமா, அவங்களேதான் வண்டியை எடுத்துகினு வந்தாங்க. ம்!... இந்தக் காலத்திலே வேலைக்காரங்களுக்குத் தான் நாம்ப பயப்பட வேண்டியிருக்கே!... ஐயாகிட்டே ஏதானும் தாக்கல் தகவல் சொல்லனுமா, சேட்?... என்ன, அப்படியா?... பேசிக்கொண்டு வந்த அபயாம்பாளின் வலக்கையிலிருந்த காப்பித் தம்ளர் ஒரு புறம் நழுவியது. இடக்கையிலிருந்த இணைப்புக்கருவி மறு பக்கம் நழுவியது. பேயறைபட்டவளென எஜமானி அம்மாள் நின்றுகொண்டிருந் தாள். . - . பாபுவின் பிஞ்சு நெஞ்சம் படபடத்தது. தலையைக் - கவிழ்ந்துகொள்வதும், தலையை உயர்த்திப் பார்ப்பது மாகச் சில விநாடிகளைக் கழித்தான். பிறகு, அம்மா!... ஐயாவோட காப்பியை எடுத்துக்கிடுங்க!...' என்று பவ்ய மாகக் கெஞ்சிதலுடன் வேண்டினான்.