பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாபுஜியின் பாபு செய்தான். ஆனால், யோசனை வருவது போல ஒர் உணர்வு பரவி வந்தது. எதிர்ப்புறத்தில் அவன் பார்வை ஓடியது. ஆ! என்று பதறினான் பாபு. ஆட்டுக்குட்டி ஒன்று தோட்டத்தில் மேய்ந்துகொண் டிருக்கிறது. . தோட்டக்காரக் கிழவர் பராக்கு பார்த்துக்கொண் டிருக்கிறாரோ, என்னவோ? அந்த மனிதருக்குத் தம் பிள்ளை யாண்டான் ஓடிப் போய்விட்ட கவலையோ, என்னவோ? சுத்த மோசம்: ஆமாம், பின்னே என்ன? கடமைக்குப் பின்னேதான் சொந்தக் கவலை எல்லாம் இருக்க வேண்டும்? "தாத்தா!" என்று கூப்பாடு போட்டான் பாபு. தொண்டை கரகரத்தது. - நல்ல காலம், தோட்டக் காவல்காரக் கிழவர் துளசிங்கம் தூங்கவில்லை; கடமையில் கருத்தாகத்தான் இருந்தார்; "டிரீயோ! போட்டு, ஆட்டுக்குட்டியை ஒரே விரட்டாக விரட்டி விட்டார். பாபுவுக்கு நல்ல மூச்சு வந்தது. முதலாளிக்குத் தோட்டம் என்றால், ஒரு நாட்டம். மேலும், அவரது உடைமைகளில் ஒரு பிசிறு சேதமானாலும் கூட, அவர் பொறுக்க மாட்டார். இயல்பாகவே, அவர் முன் கோபக்காரர். அப்பால், கேட்கவும் வேண்டுமா?) தோட்டமும் பிழைத்தது. ஆட்டுக்குட்டியும் பிழைத்தது. துளசிங்கமும் பிழைத்துவிட்டார். திரும்பினான் பாபு: காப்பித் தம்ளரை மெல்லத் தொட்டுப் பார்த்தான். வீட்டுத் தலைவி அவனுக்காக அனுமதித்திருந்த காப்பியின் ஞாபகம் வந்தது. குழந்தைகள் இன்னமும் நித்திரை கலையவில்லை. காப்பியின் கைச்சூடு இன்னும் இரண்டொரு விநாடிகளுக்குத் தாங்கும் மறுமுறையும் அவன்