பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீடிக்காத பொய் 15. - ւլի 1 காந்திஜி கடவுளோ?” - "அப்படித்தான் பேசிக்கிடுறாங்க, சீதை' ராமன் இப்படியா குறட்டை விடுவான்? பாபுவுக்குத் தான் பொய் சொல்லாமல் தப்பித்ததை எண் ணிய போது, மனம் நிறைந்தது. கால்சட்டைப்பையில் இருந்த கரும்புத்துண்டு ஞாபகம் வந்தது. எச்சில் ஊறத் தொடங்கியது. அவன் மாடிப்படிகளைக் கடந்தான். - வழியில், அபயாம்பாள் அம்மாள் எதிர்ப்பட்டாள்; பசங்க காப்பி சாப்பிட்டுப்பிட்டாங்களா?' என்று வினவினாள் . பாபு, அம்மாளைப் பக்தியுடன் பார்த்தான். அம்மாளின் முகத்திலே ஒரு புதுமையான-புதிய சோகம் இழுைகிறதே!- ஏன்?... - "ஆமாங்கம்மா' என்று மரியாதையுடன் பதில் சொன் னான் பாபு. "நீ காப்பி குடிச்சியா?” ம்!” என்று தலையை ஆட்டிவிட்டு நின்றான் சிறுவன். அடுத்த விநாடிதான் அவனுக்குச் சுய நினைவு வந்தது உண்மையைச் சொல்லிவிடத் துடித்தான்! o அதுவரை, அபயாம்பாள் அம்மாள் அங்கு நின்றால் தானே? . . . . . . . . - . . . . - பாபுவுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது :