பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாபுஜியின் பாடி துட்டா? அதை நான் எங்கே கண்டேன்?' என்று பரிதாபமாகச் சொன்னான் பாபு: துட்டுக்கு-காசு பணத் துக்கு-நான் எங்கே போவேன்?’ என்றும் தொடர்ந்தான். கபாவம்'... உன் வீதத்துக்கு நாங்க வேணும்னா போட்டுக்கிறோம். பணம் விழுந்தாக்க மோசம் பண்ணாம, உண்டான ஈவையும் குடுத்துப்பிடுறோம்!” என்று பேசினார் காசி. - ஆமாம்ப்பா!' என்று ஆமோதித்தாள் காவேரி; பிள்ளை குட்டிக்காரி ; பாசத்துடன் பேசினாள், கணவன் படுத்த படுக்கை, ஆசை இருப்பது இயல்புதான். விரக்தி சூழப் பாபு சிரித்தான். பல்வரிசை அழகாக விளங் கிற்று. "எனக்கு நித்த நித்தம் ஆண்டவன் படி அளந்தாலே போதும். நான் அநாதை. எனக்கு எதுக்குப் பணம்?" என்று சொல்லிவிட்டு, பிறகு, "நான் சின்னப்பிள்ளை ! நீங்க கூட்டுச் சேர்ந்து சீட்டு வாங்குங்க. பகவான் கண் திறந் தாலும் திறப்பான்' என்றும் தொடர்ந்தான் சிறுவன். . நல்ல பிள்ளை நம்ப பாபு' என்று பாராட்டினார் துளசிங்கம். ஆமா. ஆமா... ம்... இந்த வருசம் பொங்கல் இனாம் கூடத் தரல்லே நம்ப முதலாளி. அதைக் குடுத்திருந்தாலும், நம்பளோட கைச்செலவுக்கு உபயோகப்பட்டிருக்கும்!” என்றார் காசி. மெல்லிய குரலில் சொன்னார்; எஜமானி அம்மாள் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தபடி பேசினார். உலகம் புரிந்தவர், பாருங்கள்! "எப்பவும் வருஷாவருஷம் பொங்கல் இனாம் தருவாங் களோ?' என்று கேட்டான் பாபு. -ஒ!' - அப்படின்னா என் இப்ப கொடுக்கலை?" என்று திரும்பவும் கேட்டான் பாபு. விவேகம் பொதிந்த வினா!