பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாபுஜியின் பாபு நினைவுக்கு வந்தது. நவகாளி யாத்திரையின்போது, ஓர் ஏழை முஸ்லிம் சிறுமி நோய் வசப்பட்டுக் கிடந்ததைக் கண்டு, உடனே அச்சிறுமி மீது தம் போர்வையை எடுத்துப் போர்த்தி, அச்சிறுமிக்கு மருந்தும் கொடுத்தாராம். அம்மகானை எதிரி என்று நினைத்த மக்கள் அவரது தயாள சிந்தையைக் கண்டு நீங்க கடவுளின் தூதர்' என்று கும்பிட்டார்களாம். அதற்குப் பாபுஜி, "என் கடன் பிறருக்குப் பணி செய்து கிடப்பதே. நான் உண்மை ஊழியன். எவரிடமும் நீங்கள் அச்சம் கொள்ளாதீர்கள்; பிறரையும் அச்சத்துக்கு உள்ளாக்காதீர்கள். ஒரே கடவுள் படைத்த மக்கள் நாம்!... நாம் எல்லோரும் சமமாக வாழ உரிமை பூண்டவர்கள்!” என்றாராம். இவ்வுண்மையின் நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தபோது பாபுவின் மேனி சிலிர்த்தது. 豪 * - * டேய், பாபு நைனா கூப்பிடுறாங்கடா!' என்று ஒடி வந்து சொன்னான் ராமன். - பாபு, பிரித்த புத்தகத்தைப் போட்டுவிட்டு, மாடிக்கு ஓடினான். - - - எண்டா, ராஸ்கல்!...பங்களாவுக்குப் பெரிய மனுசங்க வந்திருக்கிறப்ப, நீ இங்கே வந்து நின்னா, என்னடா? கீழே என்ன செய்யிறே?" என்று கோபமாகச் சத்தம் போட்டார் ஆனந்தரங்கம். * . பாபு அச்சம் சூழ, கைகளைப் பிசைந்துகொண்டு நின்றான்; முதலாளியின் முகத்தைப் பரிதாபம் சூழப் பார்த்தவாறு நின்றிருந்தான். "ஐயாவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டாடா!' ஆகட்டுங்க, எசமான்' ஒரு நொடியில் தண்ணீர் கொணர்ந்தான் ԱTւի ஆனந்தரங்கத்தின் கைகளில் கொடுக்கப் போனான். , சீ!... ஐயாகிட்டே கொடேண்டா!" என்று மீண்டும் கோபித்துக்கொண்டார் ஆனந்தரங்கம்.