பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாபுஜியின் பாடி பாபுவின் நினைவு தன் சீட்டுக்கு ஓடியது. ஒட்ட மென்றால், நாலு கால் பாய்ச்சல்தான்! அம்மாவும் ஐயாவும் மாடிக்குப் போனார்கள். பாபு முக்காலியில் கிடந்த பத்திரிகையைப் புரட்டினான். காந்திஜி நூற்றாண்டு விழாவை ஒட்டிய படங்களை ரசித்தான் அவன். பாபுஜி!... பாபுஜி!” என்று அவன் நெஞ்சம் முணுமுணுத்தது. ஓரிடத்தில் கொட்டை எழுத்து களில் அச்சாகியிருந்த கட்டத்தைப் படித்தான். . . . . . . - "மனிதனுடைய உயிரைவிட ஆட்டுக்குட்டியின் - உயிர் எந்த விதத்திலும் தாழ்ந்ததன்று!" எவ்வளவு அற்புதமான உண்மை! காந்திஜியால்தான் இத்துணை தெளிவுடன் உரைக்க முடியும் உலகை உணர்ந்த மகான் ஆயிற்றே! . ஆட்டுக்குட்டி பாபுவின் இதயத்தில் உயர்ந்த இடம் பிடித்துக்கொண்டது. குதித்துக்கொண்டு ராமனும் சீதையும் கான்வென்டி’ லிருந்து திரும்பினர். - - - திரும்பிப் பார்த்தான் பாபு. -- மிகவும் களைப்புடன் தோன்றினர் ராமனும் சீதையும். ஸ்டுடிபேக்கர் வண்டியில் அவ்விருவரையும் இட்டுச் சென்று மீண்ட நாள்கள் சொப்பனம் போலிருந்தது பாபுவுக்கு: பாபு. இந்தா பிஸ்கட்!" என்று கூறி, ரொட்டியை பாபுவுக்குக் கொடுத்தான் ராமன். . . . . . . . கஷ்டங்கள் இல்லையென்றால், உலகம் பிடிபடாதோ? - சீதைதான் இயல்பிலேயே இரக்கச் சிந்தை பெற்ற சிறுமி ஆயிற்றே! அவள் பங்கும் பாபுவுக்குக் கிட்டியது. . . . . o பாபுவுக்குத் தலைகால் புரியாத மகிழ்வு. அவர்கள் தன்னைப் புரிந்துகொண்டனரே என்றோ, என்னவோ?.