பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பாபு இராஜேந்திர பிரசாத்

மாநாட்டுத் தலைமையுரை, பீகார் மக்கள் மனதிற்கு மகிழ்ச்சி தந்தது. இதனால் அறப்போர் இயக்கம் மேலும் பலமடைந்து வளர்ந்தது.

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு 1920-ஆம் ஆண்டு நாகபுரி நகரில் கூடியது. இந்த மாநாடு காந்தியடிகளாரின் ஒத்துழையாமை என்ற அறப்போரை ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொண்டது.

பட்டம் - பதவிகளையும், கல்லூரிகள், வழக்கு மன்றங்கள் முதலியவைகளையும், துறக்க வேண்டும், பகிஷ்கரிக்க வேண்டும். அதற்கான சட்டங்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் சட்டங்களை மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற உணர்வை எல்லாரும் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் நாம், அரசாங்கத்துடன் ஒத்துழையாமல் இருக்கின்றோம் என்பதே காந்தியடிகளின் திட்டமாகும்.

இராஜேந்திர பிரசாத், காங்கிரஸ் தீர்மானத்துக்கு இணங்கி வக்கீல் தொழிலைக் கை விட்டார். ஒவ்வொரு மாதத்துக்கும் நான்கு அல்லது ஐந்து ஆயிரம் ரூபாய் வருவாயை அவரது வழக்குரைஞர் தொழில் தந்து கொண்டிருந்தது. ஆனால், அவ்வளவிலும், ராஜேந்திர பிரசாத் தனது எதிர்க்கால குடும்ப வாழ்க்கைக்காக எதையும் சேமித்து வைக்கவில்லை. ஆனாலும்,தன்னிடமுள்ள செல்வத்தை ஏழை மக்களுக்காக வாரித் தந்தார் என்பது சத்தியமாகும். எனவே, ராஜன் பாபு வழக்குரைஞர் தொழிலை வெறுத்துக் கைவிட்ட போது, அவருடைய வங்கி சேமிப்புக் கணக்கில் இருபத்தைந்தே ரூபாய் மட்டுமே இருந்தது என்பதே உண்மை.

இங்கிலாந்து நாட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு 1921 ஆம் ஆண்டில் வந்தார். ஆனால் காந்தியடிகள் பகிரங்கமாக அவரது வருகையை வெறுத்து, பகிஷ்கரித்தார். இளவரசர் எங்கெங்கு வருகை தந்தாரோ, அங்கங்கே எல்லாம் கருப்புக் கொடிகள் இளவரசரை வரவேற்றன. ஆலைத் தொழிலாளர்கள் பல்வகைத்