பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

பாப்பா முதல் பாட்டி வரை

சேகரித்த முட்டைகள், தரமான ஆண் உயிரணுக்களுடன் சேர்த்துப் பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. சுமார் 24 முதல் 48 மணி நேரத்தில், முட்டையும், உயிரணுவும் இணைந்து, கரு வளர ஆரம்பிக்கும். நன்கு வளர்ந்த தரமான கரு, ஊசி மூலம் கருப்பையினுள் செலுத்தப்படுகிறது.

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பின்னர் மீண்டும் குழந்தை வேண்டுமென வரும் பெண்கள், பலமுறை, ஊசிமூலம் தரமான விந்து ஏற்றியும், கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு இந்த முறை உகந்தது.

சோதனைக்குழாய், இக்ஸி முறைகளில், 80 சதவீத முட்டைகள் கருவாக மாறுகின்றன. இதில் 30 சதவீதம் கருதான் கருப்பையில் தொடர்ந்து வளர ஆரம்பிக்கிறது. இதில் நவீனமான பிளாஸ்டோசிஸ்ட் ( blostocyst Culture) மற்றும் அஸிஸ்டட் ஹேச்சிங் (Assisted Hatching) முறைகளில் செயற்கைக் கருவுறுதலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர் முறை : எவ்விதக் குறையும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்கும் தம்பதிகளுக்கு, இயற்கையில் பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும், கருப்பைக் குழாயில் சந்தித்துக் கரு உருவாகிறது. இக் கரு, 4-5 நாள்களில் கருப்பைக் குழாயில், பல செல்களாக வளர்ச்சி அடைந்த பிளாஸ்டோசிஸ்ட் நிலையில் தான் கருப்பையைச் சென்றடைந்து வளர்கிறது.

பிளாஸ்டோ சிஸ்ட் கல்ச்சர் முறையில், பதனப்பெட்டியில் 4, 5 நாள்கள் வரை மாறுபட்ட சூழ்நிலையில் வைத்து, 64 செல்கள் வரை உருவான பிளால்டோசிஸ்ட் நிலையில், கர்ப்பப் பையில் கரு செலுத்தப்படுகிறது.