பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 த கோவேந்தன்

பெரிதும் வற்புறுத்தப் பெற்றுள்ளன. இவற்றிடையே உள்ள வேறுபாட்டினை நிம்பார்க்கர் நீக்குகிறார்.

   அத்துவிதத்தில் இறைவனுக்கும், மனிதனுக்கும் நேரடியான நெருங்கிய தொடர்பு இல்லை. இத்தகைய உறவினை அத்துவிதம் மறுக்கிறது. பிற்கால வைணவம் இறைவனுக்கும் மனிதனுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு என்று கொள்வதில் உணர்ச்சி நிலையையே அதிகமாக வற்புறுத்துயுள்ளது. நிம்பார்க்கர், அறிவிற்கு உரிய இடம் யாது என்பதையும் நன்கு அறிகிறார். உரிய இடங்களைத் தமது மெய்ப்பொருளியல் கருத்து முறையிலே தருகிறார். அறிவையோ அல்லது உணர்ச்சியையோ அதிகமான நிலையில் ஒன்றையொன்று. மாறுபடுகின்ற நிலையிலே வற்புறுத்தவில்லை.
   சமய உலகிலும், மெய்ப்பொருள் இயல் உலகிலும் நடுவு நிலைமை மிக்க தீர்ப்பினைக் கொண்டது போல அறஉலகிலும் கொள்கிறார். போற்றத்தக்க இசைவு காணும் நோக்கும் பல்வேறு உள நிலைகட்கும், பற்று கட்கும், திறமைகட்கும் இடம் தரும் விரிந்த மனமும், நிம்பார்க்கரது கருத்துகளிலே காண்கிறோம்.
   புலமை யாளர்களும் அல்லது தொழிலாளர்களும், துறவிகளும், இல்வாழ்வோரும், தன்னம்பிக்கை உடையோரும், கோழைகளும், மற்ற நிலைகளில் மாறுபடுவோரும், யாவரும் ஒருமித்த நிலையில் ஒன்றுபடுதல் வேண்டும் என்பது நிம்பார்க்கர் கருத்து.
   நடுவுநிலைமைக் கொள்கையையே அவர் பெரிதும் போற்றினார். சகிப்பும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், மற்ற கருத்துகளை ஏற்கின்ற உளநிலையும், விரிந்த உள்ளமும், பரந்த நோக்கும், நிம்பார்க்கரது கொள்கையைப் பலரும் விரும்பும் மெய்ப்பொருளியல் சார்புடைய இந்தியச் சமயக் கருத்து முறைகளுள் ஒன்றாகச் செய்தன.