பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 த கோவேந்தன்

விடுகிறார். சிலருக்கே உரியன என்ற வரையறை இல்லாது அனைவரும் பயன்படுத்துகிற நிலையில் வல்லபரது கருத்து விளக்கங்கள் அமைகின்றன.

   சுருதி அல்லது வேதம் தருகின்ற முக்கியமான விளக்கத்தின் துணையைக் கொண்டு இறைவனது உண்மையைக் குறித்த சிக்கலின் கூறுகள் அனைத்தையும் விவாதிக்க வேண்டும். தனித்த சிந்தனைக்கு வாய்ப்பு இல்லை. இவ்வுண்மை, மூல நூல்களில் நன்கு விளக்கப் பெறுகிறது. 
   வல்லபர், இவ்வுண்மையினை அப்படியே ஏற்றர். மூல நூல்கள் அனைத்தையும் எழுத்திற்கு எழுத்து விளக்குகிறார். அனைத்துப் பகுதிகட்கும் முக்கியத்துவம் தருகிறார். சிந்தனை தருகின்ற விளக்கத்தைப் புறக் கணித்து வேதப்பகுதிகள் உணர்த்துவனவற்றையே, விளக்கிச் செல்கிறார். 
   சங்கரரருக்கும், வல்லபருக்கும் அடிப்படையிலே உள்ள வேறுபாட்டினை நாம் அறிதல் வேண்டும். வேதநூல் கட்குச் சங்கரரும், வல்லபரும் தந்த விளக்கங்களே அவர்களுக்கிடையே எழுந்த வேறுபாடுகளுக்கு எல்லாம் காரணமாகும். வல்லபர், சங்கரர் அளவையையே முழுமையும் நம்பியதாகவும் ஆதாரமாகக் கொண்ட தாகவும் கூறி, பல பகுதிகளைக் கண்டிக்கிறார்.
  புலன்கடந்த பொருளியல் சிக்கல்களைச் சுருதியில் அல்லது வேதத்தில் காணப்படும் பகுதிகட்கு ஏற்பவும் நமது கருத்துகட்கு ஏற்பவும் விளக்கம் கொண்டதாக வல்லபர் சங்கரர் மீது குற்றம் சாட்டுகிறார். வேத மூல பாடங்கட்குச் சங்கரர் தந்த விளக்கங்கள் பொருந்துவன அல்ல என்பது வல்லபரது குற்றச்சாட்டாகும். ஆதலால் வல்லபர், சங்கரரை வன்மை யாகத் தாக்குகிறவர் ஆகிறார். சங்கரரை, மாத்யமிக புத்தன் எனவும் கூறுகிறார். சங்கரரை இவ்வாறு பாஸ்கரரும், இராமானுஜரும் மற்றையோரும் கூறியுள்ளனர்.