பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 த. கோவேந்தன் தற்கு இராமானுஜர் பிரமத்தை அறிதற்குரிய வழிகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார். தர்ம பூதஞானம்’ என்னும் தத்துவத்தைப் பயன்படுத்துகிறார். அளவை நெறியில் அப்பிரதக் சித்த விசேஷணம்’ என்பதைப் பயன்படுத்துகிறார்.இலக்கணச்செய்தியான சாமானாதி கரண்யம் என்பதைப் பயன்படுத்துகிறார். உலகு உண்மையை ஏற்கும் சத்கரியம்’ என்பதைப் பயன்படுத்து கிறார்.

  தர்மபூதஞானம் பற்றிய கொள்கை அல்லது அடைமொழிகேற்ற உணர்வு, ஆன்மாவிற்கு உரியது. இது விசிஷ்டாத்வைத அறிவு ஆராய்ச்சிஇயலில், அடிப்படைக் காரணமாக உள்ளது; அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்ற ஒன்றைக் குறித்தாக விளங்குகிறது. தோன்றுகின்ற புற உலகு ஆன்மா, பிரமம் ஆகிய இவற்றின் இயல்பைக் குறித்த விளக்கத்தைத் தர்மபூத ஞானக் கொள்கை தருகிறது.
  ஆன்மாவிற்கு உணர்வு இன்றியமையாத பண்பாகும். உணர்வு என்பது ஆன் மாவைக் குறிப்பதே ஆகும். உணர்வின்றி ஆன்மா தன்னைத்தான் உணர்தல் இயலாது. ஆன்மாவினின்று உணர்வையும்,உணர்வினின்று ஆன்மா வையும் பிரித்தறியலாம் எனினும் இவ்விரண்டும் பகுக்க ஒண்ணாதவை.
  தன்னுணர்வு என்பது உணரும் ஆன்மாவைக் குறித் தாகும். ஆன்ம உணர்வையும் குறிக்கும்; அடிப்படையாக விளங்கும் அறிவையையும் குறிக்கும். பண்பாக விளங்கும் அறிவையும்,இங்குப்பிரித்து அறியவேண்டும். விளக்கின் ஒளியும் போல ஆன்மாவும், ஆன்ம உணர்வும் அமைகின்றன.
  ஞானம் என்பது பொருளாகவும், பண்பாகவும்

விளங்குகிறது. கதிரானது ஒளி கதிரவனின் பண்பாகும். அதே சமயத்தில் பல நிறங்களில் நிலைக்களமாகவும்