பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 69 சிந்தித்தல் வேண்டும், சிந்தித்தவற்றை நன்கு தெளித வேண்டும்.இவ்வாறு கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகிய நிலைகள் வேதத்தின் உள் இயைபினைப் புலப்படுத்தி வேத முழுமையும் ஒரே பேருண்மையை உணர்த்தும் நோக்குடையது என்பதை விளக்கும். வேதம், மாத்வர் கருத்துப்படி அதிகாரம் செலுத்து வதுன்று. கட்டளை இடுகின்றது அன்று. அருள் வெளிப் பாடும் அன்று. அவரவர்கள் அறிவு விளக்கத்திற்கு ஏற்ப வெவ்வேறு நிலைகளில் உண்மையினை உணர்த்துவதாக வேதத்தைக் கருதுதல் கூடாது. வெவ்வெறு கவிஞர்களும், மெய்ப்பொருளியலாரும், தத்தம் கொள்கைகட்கு ஏற்பச் சொற்களால் உணர்த்திய உண்மைகளின் திரட்டு எனவும், வேதத்தைக் கொள்ளுதல் கூடாது. செயல்நிலை பக்தி ஞானம் ஆகிய வெவ்வேறு ஒழுக்க வேறுபாடுகளை உணர்த்துவதாகவும் வேதத்தைக் கருதுதல் கூடாது. உலகினை ஆளும். தெய்வங்கள் என, பல்வேறு தெய்வங் களை வேதம் உணர்த்தி அத்தெய்வங்கள் வழிகாட்டுவதை வற்புறுத்துவனவாகவும் கருதுவதற்கு இல்லை. உலகு பற்றியோ, அல்லது மூலக்கூறு பற்றியோ வெவ்வேறு கொள்கைகளைப் கொண்டது எனவும் வேதத்தைக் கருதுதற்கு இல்லை. வேதத்தின் உட்பொருளை உணராது விடுப்பது சாந்தியை இழப்பதாகும் என்று மாத்வர் கூறுவதுகூட உபநிடத்தைப் பின்பற்றியேயாகும். ஆன்மீக வாழ்விலே முழுமை அடைதலே விடுதலையாக முடிகிறது. விடுதலை அடைவு இயல்வது உண்டெனின் வேதம் இன்றியமை யாததே. வேதத்தை ஏற்றல் என்பது பொது அறிவு கொள்ளும் கருத்துகளைக் கொண்டது வேதம் என்பதை மறுத்தல் ஆகும். இப்பொதுக் கருத்துகள் வேதத்திற்குப் பொருந்துவன அல்ல. உயரிய அறிவின் இன்றிய மையாமையையும் உணர்தல் வேண்டும். வேதமுழுமையும் பரவி நிற்கும் உள் இயைபினை உணர்தல் வேத