பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 德5 இயற்கையையும் சூழ்நிலைகளையும் சித்திரிக்கிற போது கூட, வெறும் இயற்கை வர்ணனையுடன் அவர் நின்று விடுவதில்லை. இயற்கைக்கும் கதாபாத்திரத்துக்கும், சூழ் நிலக்கும் கதைமாந்தரின் மனநிலை அல்லது அந்நேரத்திய உணர்சிகளுக்கும் பிணைப்பு இருப்பதாகக் காட்டுவதில் மெளனி ஆர்வம் கொண்டுள்ளார். சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனத்திற்குச் செல்லும் நேர்காட்டையைக் கொள்ளும் போது, தன்னை மறந்து அவன் மனம் ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம், தன்ஞல் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும் போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் சன்து எண்ணித் தன் கவலைகளைக் காற்றில் விடுவான். ஆணுல், சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலே மயமாக்கி விடும். எட்டாத தூரத்தில் வானில் புதைந்து, கேலிக்கண் சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவனது பாழ்பட்ட பழைய வாழ்க்கை நினைவு எழும். கோபித்து, வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி, கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில், அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணுந்து நோக்குவான். அவையும், அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று, அவனுக்குத் தோன்றும், (பிரபஞ்ச கானம்} கல்லூரி விடுதியின் மேல் மாடியில் இரவு வெகுதேசம் வரையில் அவன் தனியாக உட்கார்ந்திருந்தாள். சந்துஷ்டி அற்ற உலகினின்றும் எவ்வளவு தூரம் விலகி நிற்க முடியும் என்ற திணைப்புள்ளவை போல் எண்ணிலா நகடித்திரங்கள் உயரே அமைதியில் பிரகாசித்திருந்தன. எட்டி மாதா سحirع