இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
238
பாரதிக்குப் பின்
விசைப்படகுபோல், வேகவேகமாகக் கண்கள்சுழல, கட்டுமரம்போல் கால்கள் மரத்துப் போய் நடக்க நாலடி நீளமுள்ள மாவலரசி என்னும் மீனை அமுக்க முடியாமல் அமுக்கி வைத்திருக்கும் நயிலான் வலைபோல், கொண்டையை அடக்க முடியாமல் அடக்கிய வலை ஜொலிக்கும்படி மல்லிகைப்பூ பந்தலிட விறால் மீனின் வாளிப்போடு, கெண்டை மீன் கண்களோடு ஒரு வாலிபனுடன் ஜதையாக வந்தாள் முனுசாமியின் மகள் மச்சகாந்தி”
இப்படி, தமிழ் உரைநடை காலத்தோடு போட்டியிட்டு, புதிய வலிமையும் புது வனப்புகளும் ஏற்று, புத்துயிர்ப் போடும் புத்துணர்ச்சியோடும் வளமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இளந்தலைமுறையினர் புதிய பார்வைகளோடு புதிய கருத்துக்களோடும் வாழ்க்கையை கவனித்து, ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் எழுத்துத் துறையில் ஈடுபட ஈடுபட தமிழ் மொழி புத்தூட்டம் பெற்று, குன்றா இளமையுடன் மிளிரும்.
—முற்றும்—