80
பாரதிக்குப் பின்
“பேராய்ச்சி, காளியின்ஸ்வரூபம்...எங்கள் பெரியண்ணத் தேவருக்குக் குடும்பத் தெய்வம்—தலைமுறை தலைமுறையாகக் காத்து வந்த பேராய்ச்சி...
பேராய்ச்சி! அதில் என்ன தொனி! எவ்வளவு அர்த்தபுஷ்டி!
இருண்ட வெளிச்சத்தில் இருண்ட கோரமான சிலை...
தாயின் கருணை, என்ன நம்பிக்கை!
நாளைக்கு அம்மனுக்குக் கொடை
நாளைக்கு இவ்வளவு நேரத்தில் இங்கு எப்படியிருக்கும்?
இந்த மௌன ககம் மருந்திற்காவது கிடைக்குமா?
என் கண்கள் இருட்டில் அசட்டையாகத் துழாவுகின்றன.
கோயில் வாசலில் இரண்டு ஆட்டுக்கிடா.
பெரியண்ணத் தேவருடையவைதான்...அம்மனுக்கு வளர்த்து விடப்பட்டவை.
வாழ்வு நாளை வரைதான் என்று அவற்றிற்குத் தெரியுமா? சித்திரபுத்திரன் மாதிரி, எனக்குத் தெரியும்.” (சயங்கால மயக்கம்)
இது போன்ற ‘தாவித் தாவிச் செல்லும் நடை’யை புதுமைப்பித்தன் எல்லாக் கதைகளுக்கும் கையாண்டார் என்றோ, இதே நடையை மாறாது அவர் காலம் முழுமையும் அனுஷ்டித்து வந்தார் என்றோ சொல்வதற்கில்லை. கதைக்கு எடுத்துக் கொண்ட விஷயங்களுக்கேற்ப அவர் வெவ்வேறு விதமான நடையையும் ஆக்கிக் கொண்டார் என்பதைப் புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்கிறவர்கள் விளங்கிக் கொள்ள இயலும்.