பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்(1891-1964) இளமையில் பக்திக் கவிஞராக மலர்ந்து, தேசியக் கவிஞராக வளர்ந்து, தன்மான இயக்கத்தின் புரட்சிக் கவிஞராக முதிர்ந்து,மனித நேயக் கவிஞராக நிறைவு பெற்றவர். தமிழ் வளர்ச்சி, பெண் விடுதலை,சமுதாய சீர்திருத்தம், மடமை ஒழிப்பு, பொருளாதாரச் சமன்மை ஆகிய குறிக்கோள்களுக்குத் தம் எழுத்துக்களால், ஓயாமல் குரல் கொடுத்தவர். 1929 ஆம் ஆண்டிலேயே கருத்தடை பற்றிய சிந்தனைகளைக் கவிதையில் வடித்தவர். நல்ல குடும்பத்தைப் பல்கலைக் கழகம் என்றவர். தமிழால் பாரதிதாசனும், பாரதிதாசனால் தமிழும் பெருமை பெற்றது நாடறிந்த உண்மை.

கவிஞர் முருகுசுந்தரம் (1929) கல்லூரி மாணவராக இருந்தபோது பாரதிதாசனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும், அவரிடம் கவிதை பயிலும் வாய்ப்பும் பெற்றவர். தமிழாசிரியர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும், பாரதிதாசன் விருதும், தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும் பெற்றவர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றிலும், கவிதையியலிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்.


Barathidhasan(Tamil) Rs 25
ISBN 81-260-5


சாகித்திய

அகாதெமி