பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 37

துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை-தன்னில் போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர் போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!

என்றுரைத்தான்். இருசேவகர்கள்-அந்த ஏந்திழை அண்டநெருங்கி விட்டார்!-அயல் நின்ற கொலைஞர், உதாரனையும் நட நீ என்றதட்டினர் அச்சமயம்-அந்த மன்றிலிருந்தஓர் மந்திரிதான்் முடி மன்னனை நோக்கி உரைத்திடுவான்-நீதி அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்; அன்னது நீக்கி அருள்க' என்றான்.

'காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங் கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட நீதிநன்று மந்திரியே! அவன் இறந்தால்

நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்! சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்;

தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்; ஒதுகஇவ்விரண்டிலொன்று மன்னவன்வாய்!

உயிர்எமக்கு வெல்லமல்ல! என்றாள் மங்கை.

என்ஆணை மறுப்பீரோ சபையிலுள்ளி:

இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார் பின்நானும் படிசும்மா இருப்பதுண்டோ?

பிழைபுரிந்தால் சகியேன் நான்!உறுதி கண்டீர்! என்ஆணை! என்ஆணை!! உதாரனோடே

எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக் கன்மீதி லேகிடத்திக் கொலைசெய் வீர்கள்

கடிதுசெல்வீர்! கடிதுசெல்வீர்!! என்றான் மன்னன்.