பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 63

என்னை நோக்கி என்றன் அருமைக் கன்னல் மொழியாள், கண்ணி உகுத்துச் சாப்பாடும் இன்றித் தான்்நின்றிருப்பாள் என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்!

(வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக் காணுகின்றான்.)

பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்! நீபோம் பாங்கில் நேரிழை என்மனை, மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில் உலவாது மேனி, உரையாது செவ்வாய், இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய் இருப்பாள், அவள்பால் இனிது கூறுக; பெருமையை உன்றன் அருமை மணாளன் அடைந்தான்். அவன்தன் அன்னை நாட்டுக்கு, உயிரைப் படைத்துஉன். உடலைப் படைத்தான்். என்று கூறி ஏகுக, மறந்திடேல்

(தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்)

பாண்டி மாநாடே, பாவையே! வேண்டினேன் உன்பால் மீளாவிடையே!

Ο Ο Ο 1948