பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்கவிஞரின் கருத்துக் குவியல்! ஏற்றுப் போற்றிட எழுவீர்! "புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும்போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது; படிக்கின் றோம், பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல; காலத்தையே மாற்றியமைப்பவர்; புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம்கவிஞர் உயிர்க்கவி, உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி. எளிய மக்களின் தசையையும் பிய்க்கும்படியான புரட்சிக் கவிஞரின் புதுக்கவிதைகளைப் படிக்க வேண்டும், பாடவேண்டும்; பயன் பெறவேண்டும்; புதுக் கவிதைகளைப் புரட்சிக்கவி போல் பாடிட முன் வரவேண்டும். பேரறிஞர் அண்ணா (1945)