பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 69

பண்டைத் திராவிடத்தின் பண்பு குலைக்க இனி - அண்டைப் பகைவர் நினைப்பர்எனும் ஐயமோ?

தொண்டு விரும்போம் துடைநடுங்கோம், எந்நாளும் சண்டைஇட்டுத் தோற்றதில்லை தக்க

திராவிடர்கள்

எண்திசையும் நன்றறியும் அன்றோ இனிக்கும் கற் கண்டே கனியேளங் கண்மணியே

கண்வளராய்.

தங்கம் உருக்கித் தகடிட்டுப் பன்மணிகள் எங்கும் அழுத்தி இயற்றியதோர் தொட்டிலிலே

திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு மெத்தையின் மேல் மங்கா உடல்மலரும் வாய்மலரும் கண்மலரும்;

அங்கங்கு அழகுசெயும் ஆண்அழகே

கண்வளராய்

எங்கள் மரபின் எழில் விளக்கே

கண் வளராய்! குயில் 1947