பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பாரதிதாசன்



மலர்க்குழற் பாட்டி தாலாட்டு


ச்சி விளாம்பழத்தின் உட்சுளையும்
கற்கண்டும்
பச்சைஏலப்பொடியும் பாங்காய்க்
கலந்தள்ளி

இச்செச் செனஉண்ணும் இன்பந்தான்
நீகொடுக்கும்
பிச்சைமுத்துக் கீடாமோ என்னருமைப்
பெண்ணரசே!

தஞ்சைத் தமிழன் தரும் ஓவியம்
கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்
சறிவேன்,

அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா
உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய வையப்
படிவம்!

முகிழாத முன்மணக்கும் முல்லை
மணமும்
துகள் தீர்ந்த சந்தனத்துச் சோலை
மணமும்