பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

வாழை மரத்தடியில் பல கன்றுகள் குருத்து விடுவது போல அந்த இளங் கவிஞர்களின் கவித்திறன் பாரதிதாசன் பாணி யில் ஆற்றலோடு முளைவிடத் தொடங்கி இருப்பதையும் நாங்கள் கண்டோம். பாரதிதாசனின் கவிதா மண்டலம் பாரதியாரின் கவிதா மண்டலத்தைக் காட்டிலும் பன்மடங்கு பரந்துபட்டதாக நாடெங்கும் பரவி நிற்பதை யும் நாங்கள் உணர முடிந்தது. வளர்ந்துவரும் இந்த இளங் கவிஞர்களையெல்லாம் பாரதிதாசன் பரம்பரை' என்னும் பொது மகுடமிட்டுப் பொன்னி இதழ்களில் ஏன் அறிமுகப் படுத்தக் கூடாது என்ற எண்ணம் உருவாயிற்று.

அப்போது பொன்னி இதழ்களை வெளியிடுவதில் எனக்குத் துண்ைபுரிந்து வந்தவர்கள் இருவர் கவிஞர்களாக இருந்ததையும் அவர்கள் என் எண்ணத்திற்குக் கண் கூடான சான்றாகத் திகழ்ந்தார்கள் என்பதையும் குறிப்பிடுவது மிக அவசியமாகும், நாரா. நாச்சியப்பன், மு. அண்ணாமலை ஆகிய அந்த இரண்டு இளங்கவிஞர்களும் பாரதிதாசன் பரம்பரையில் முன் வரிசையைப் பிடித்துக் கொண்டதில் வியப்பேதும் இல்லை.

அந்த நாளில்-அதாவது ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்கு முன்பு-பாரதிதாசன் பரம்பரையில் அறிமுகமாகி இன்று தம் பெயருக்கு ஏற்ப பாவேந்தரின் தலை மாணாக்கராகவும் தமிழக அரசின் பாவேந்தர் விருதினைப் பெற்றிருக்கும் முதல் கவிஞராகவும் திகழ்பவர் உவமைக் கவிஞர்-புலமைக் கரசு சுரதா, அவருடைய மலேசிய வருகை, பொன்னி வளர்த்த பாரதிதாசன் பரம்பரையை இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கும், எண்ணியெண்ணி மகிழ்வதற்கும் ஒர் அரிய வாய்ப்பாக அமைந்தது. , , -

கவிஞர் சுரதாவுக்கும் எனக்கும் பரிச்சயம் ஏற்படு

வதற்குப் பாவேந்தர்பாரதிதாசனே காரணமாக இருந்தார். 1943-ஆம் ஆண்டு சென்னையில் முத்தமிழ் நிலையம்"