பக்கம்:பாரதித் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

சமாளிக்க முடியவில்லை. ஆதலால் 32 பக்கங்கள் கொண்ட அச்சுப் பத்திரிகையாக நடத்துவதென்று தீர்மானித்தோம்.

அந்தப் பத்திரிகை இரண்டாவது மாதத்திலேயே 64 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்தது. நூல் வடிவிலே வெளி வராத பாரதியாரது கட்டுரைகளை அதில் வெளியிடுவ தென்றும், பிற்கு நூல்ாகத் தொகுத்து வெளியிடுவதென்றும் நான் தீர்மானித்தேன்.

சுதேசமித்திரன் பழைய பிரதிகளின் தொகுதிகளுள்ள அறைக்குள்ளே மறைந்து கிடந்த பாரதியாரோடு நான் ஆர்வத்தோடு பல நாட்கள், மாதங்கள் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

பதினறு ஆண்டுகளில் வெளியான தினசரிப் பத்திரிகை, வாரம் மும்முறைப் பத்திரிகை இவற்றின் தாள்களை ஒவ்வொன்முகப் பரிசோதித்துப் பாரதியாரின் கட்டுரைகளே யெல்லாம் திரட்டிப் பிரதி எடுப்பது எளிதான காரியமா? ஆளுல் அது எனக்குக் கடினமான வேலையாகத் தோன்ற வில்லை. எதிரிலே ஒரு பத்துப் பழந் தொகுதிகளை அடுக்கி வைத்து அவற்றையே மேஜையாக்கிக் கொண்டேன். அவற்றின் ஒரு பக்கத்திலே உட்கார்ந்து வேலை செய்யத் தொட்ங்கின்ேன்.

இப்படிப் பிரதி செய்யும் பணியில் எனது நண்பர்கள் திரு. கே. எஸ். பெரியசாமியும், டாக்டர் ல. கி. முத்துசாமி யும் எனக்குப் பலநாள் உதவி செய்தார்கள். அவர்களுக்கும் பாரதிப் பைத்தியம் உண்டு. எங்களுடைய தோழமையி லேயே அது வள்ர்ந்ததாகையால் இந்தக் காரியத்தை உற் சாகமாகச் செய்தோம். பழம் பிரதிகள் நிறைந்த அறைக்கு ஒரு தனிப்பட்ட வாசனையுண்டு. அது எங்களுக்கு நறுமண மாக இருந்தது.

பாரதியார் கவிதை, கட்டுரை, கதை ஒவ்வொன்றையும் எழுதி வ்ெளியிட்ட தேதி அவர் உபயோகித்த புனைபெயர்கள் முதலிய எல்லா விவரங்களையும் விடாமல் குறிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை.

பாரதியார் முதலில் மிஸ்டர் C. சுப்பிரமணிய பாரதி என்று தம் பெயரை வெளியிட்டிருக்கிரு.ர். பின்னல் காளி தாஸன், சக்திதாஸன் என்ற புனைபெயர்களில் பல கட் டுரைகள் எழுதியிருக்கிரு.ர். தமது உண்மைப் பெயரிலேயே எழுதும்போது ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி என்று