பக்கம்:பாரதித் தமிழ்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாதா வாசகம் 133

“இச் சிறிய செய்யுள் நூல் வினுேதார்த்தமாக எழுதப்பட்டது. ஒரு சில பாட்டுக்கள் இன்பமளிக் கக் கூடியனவானலும் பதர் மிகுதியாகக் கலந்திருக் கக்கூடும். இதன் இயல்பு தற்கூற்றெனப்படும். அதா வது கதாநாயகன் தன் சரிதையைத் தான் நேரா கவ்ே சொல்லும் நடை.”

இது வினேதார்த்தமாக எழுதிய பாடலா அல் லது உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சியை வெளி யிடுகின்றதா என்பதை ஆராயவேண்டும்.

‘ என்னை யீன்றெனக் கைந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண்ணெய்திய தாய்’

என்ற வரிகளும்,

‘ நெல்லை யூர்சென்றவ் ஆணர் கலைத்திறன் நேரும்ாறென எந்தை பணித்தனன்’ என்ற வரிகளும் உண்மையான வாழ்க்கைச் சம்பவங் களைக் கூறுகின்றன.

ஆங்கிலக் கல்வியின் மேலும் பால்ய விவாகத் தின் மேலும் பாரதியாருக்கிருந்த வெறுப்பினையும் இப் பாடல்கள் உண்மையாக எடுத் துரைக்கின்றன. ஆனல் பாரதியாருக்கு அவருடைய பதினைந்தாம் வயதில் கல்யாணமாயிற்றென்று அவருடைய சரித் திரமெழுதியோர் கூறுகின்றனர். ஆனல்,

‘ ஈங்கோர் கன்னியைப் பன்னிரண்டாண்டினுள்

எந்தை வந்து மணம் புரிவித்தனன்” என்று ஸ்வ சரிதை கூறுகின்றது.

இந்நூலையும் ஆறில் ஒரு பங்கு என்ற கதையை யும் அரசாங்கம் பறிமுதல் செய்தது. அதுபற்றி 1912 அக்டோபரில் பாரதியார் இந்து பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்,