பக்கம்:பாரதித் தமிழ்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதி 209

கல்லாததுலகளவு.’ இவற்றின் ஞானம் வளர வளர மனித ஜாதி மேன்மை பெறும்.

சாஸ்திர விதி

சாஸ்திரம் மனிதனல் எழுதப்பட்டது. ஆதலால் இன்னும் நிறைவு பெறவில்லை. தெய்வ விதிகளைக் கூடியவரை பின்பற்றியே சாஸ்திரக்காரர் எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனல் காலதேச வர்த்த மானங்கள் மாறுபடுகின்றன. தெய்வ விதிகளைப் பற்றிய புதிய வித்தைகள் வழக்கப்படுகின்றன. அப்போது சாஸ்திர விதிகளை மாற்றுதல் அவசிய மாகிறது. திருஷ்டாந்தமாக வைத்திய சாஸ்திரத் தைப் பாருங்கள். கால தேச வர்த்தமானங்களுக்குத் தக்கபடி விதிகள் மாறுகின்றன. பூர்வீக ஐரோப்பிய வைத்தியர்கள் பெரும்பான்மை எல்லா வியாதி களுக்கும் நோயாளியின் உடம்பைக் குத்தி ரத்தத் தைக் கொஞ்சம் வெளியேற்றினால், அதுவே நல்ல முறையென்று நினைத்திருந்தார்கள். தலை நோவு, ஜ்வர்ம் எது வந்தாலும் உடம்பைக் குத்தி ரத்தத் தைக் கொட்டித் தீரவேண்டும். இந்த மடமை யாலே, பலர் ரத்த நஷ்டமே முதற் காரணமாய் அநியாயமாக மடிந்து போனர்கள். இக்காலத்தில் அந்தக் கொள்கை மாறிவிட்டது. ஜ்வரம் வந்தால் பத்தியம் மதுரையில் ஒரு மாதிரி, வேலூரிலே மற்றாெரு மாதிரி.

இலக்கணத்தை எடுங்கள் :

“பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினனே’ என்று பவணந்தி

முநிவ்ரே சொல்லுகிரு.ர்.

தர்ம சாஸ்திரத்தை எடுங்கள் :

பா. த.-14