பக்கம்:பாரதித் தமிழ்.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பாரதி தமிழ்

உள்ளம் பதருதிருந்தால் விரைவிலே வானந் தெளியும்.

லோகோபகாரம் எப்போது, எந்த வயதில் தொடங்கலாம்? இப்போது, இந்த நிமிஷத்திலே தொடங்க வேண்டும். யார் தொடங்கலாம்? ஆண், பெண், அலி, வலியவன், எளியவன், கிழவன், குழந்தை, குருடன், நொண்டி எல்லோரும் தொடங்க வேண்டும். -

பிறருக்கு இனியது செய்தலாவது யாது? நோய் தீர்த்தல் உண்வு கொடுத்தல், அறிவு கொளுத்துதல் முதலிய செய்கை.

பிறரென்றால் அதற்கெல்லையுண்டா? சக்திக்குத் தக்கபடி எல்லை. குடும்பத்தைக் காத்த பிறகு நாட்டைக் காக்கவேணும். பிறகு மனித ஜாதி முழுதையும் காக்கவேணும்.

லோகோபகாரத்தினல் ம னி த ன் என்ன பயனடைவான்? எப்போது?

லோகோபகாரத்தையே பரிபூரணமாகச் செய் வோன் மனிதநிலை கடந்து அமரநிலை பெறுவான். இவ்வுலகத்தில் இந்தப் பிறவியில் பயன் அடைவான். செய்கையின் வேகத்துக்குத் தக்கபடி பயனின் வேகம்.

சக்தி காக்கும்