பக்கம்:பாரதித் தமிழ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானியக் கவிதை

மிஸ்டர் பி. சுப்பிரமணிய பாரதி 18 அக்டோபர் 1916 நள ஐப்பசி 5

குறிப்பு- இக்கட்டுரை 11 கி துல்கள் மூன்றாம் தொகுதி யில் கலேகள் என்ற பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பி லும் அது சரியான படி முழு உருவத்துடன் இல்லை. கட்டுரை யின் ஒரு பகுதியும், இடையிடையே சில வாக்கியங்களும் அதிற் காணப்படவில்லை. ஆதலால் சுதேசமித்திரனில் வெளியாகியுள்ள படி முழுக் கட்டுரையும் இங்கு தருகிருேம். ஸ்மீபத்திலே மா டர் ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதி யிருக்கிரு.ர். அவர் அ தி லே சொல்வதென்ன வென்றால்:- இங்கிலாந்து அமெரிக்கா என்ற தேசங் களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத் தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அது போகிற வழி யெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/218&oldid=605523" இலிருந்து மீள்விக்கப்பட்டது