பக்கம்:பாரதித் தமிழ்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபங்கா 307

படியாக அறுக்கும் சத்தத்தைப் போலே, மேற்படி குருடனுடைய சத்தம். உன்னுடைய காதைத் தொளைத்துவிட வில்லையோ என்று என்னிடம் கேட்பீர்களானல், அப்படித் தொளைக்கவில்லை, அதாவது அவனுடைய சத்தம் கர்ணகடுரமில்லை. சிங்கத்தின் ஒலி கடினமாக இருந்தாலும், பயங்கர மாக இருந்தாலும் கல்லுளி மங்கானுடைய சத்தத் தைப் போல் அருவருப்புக்கிடமாகாது. நெஞ்சிலே மூச்சுப் பலம் இருந்தால் எவ்வளவு கடினமான சத்தமும் காதுக்கு சுகமாகவே கேட்கும்.

மேற்படி குருடனுடைய-அதாவது ஸ்ம்சயக் குருடனுடைய சத்தம் என் காதுக்கு சுகமாகத்தா னிருந்தது. காலம் சென்ற பூரீ வில்லிப்புத்துரர் முத்தையா பாகவதருடைய பாட்டைத் தமிழ் நாட்டிலே பலர் கேட்டிருக்க மாட்டார்கள். கொப் பூழிலிருந்து, ஹாகார ஹூம்காரங்கள் கொண்டு வருவதில் அந்த பாகவதர் மஹா சமர்த்தர். ஆகாச வாணம் ஏறும்போது “ஹ்விஸ்’ என்று கம்பீரமாக ஒரு சத்தம் உண்டாகிறதே, அந்தச் சத்தம் மேற்படி பாகவதர் பாட்டில் எப்போதுமே யிருக்கும். அவர் பெரிய குஸ்திக்காரரும்கூட. மூச்சையடக்கி வேலை செய்வதில் பெரிய பெரிய ஹைதரபாத்து பஹல்லா னகூட அவருக்கு சமான மாகமாட்டார்கள். அந்த பாகவதர் செத்த பிறகு, அந்த மாதிரிக் குரலிலே ஹகாரம் பேசுவது மேற் படி குருடனிடத்திலேதான் கண்டேன். ஆனல் இந்தக் குருடன் பாடவில்லை. கூவினன். அந்தக் கூவுதலுக்கும் சந்தமிருந்தது. இவனுடைய சத்தத் தின் கனமோ என்றால் மேற்படி பாகவதர் தொண் டையைவிட 90 மடங்கு வலிமையுடையது. குழந் தைப் பிராயத்திலே இவன் சங்கீதப் பயிற்சி செய் யாமல் பிச்சைத் தொழிலைக் கைக்கொண்டானே என்றெண்ணி வருத்தப்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/306&oldid=605665" இலிருந்து மீள்விக்கப்பட்டது