பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு 87
அவன் பாரதியாரிடம் அடிக்கடி வந்து கொண்டிருந் தான். இந்தியாவுக்கு விஷயம் திரட்டியளிக்கும் செயலிலும் ஈடுபட்டான். அவன் செய்த் சூழ்ச்சி வெளியானபோது அவனைப் பக்கத்தில் அணுகவிடக் கூடாது என்று கூறிய நண்பர் ஒருவரிடம் பாரதி யார், “நாம் அதற்கு தர்மதேவதையின் ஸ்காயமும் பாரதமாதாவின் அருளும் உள்ளவரை நமக்குத் தீங்கு வராதென்றும், நாம் யாருக்கும் கனவிலும் கூடத் தீங்கை எண்ணவில்லை என்றும் சொல்லி முடித்தோம்’ என்று கூறியதாக அக்கட்டுரை கூறுகிறது.
பாரதமாதாவின் அருள் பாரதியாருக்கு நிச்சய மாக இருந்ததென்றுதான் கூறவேண்டும். இல்லா விட்டால் அவருடைய பத்திரிகை முயற்சிகள் ஒடுக்கப்பட்டு அவர் மனம் குன்றியிருந்த சமயத்தில் அவருக்குப் புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்க வ. வெ. சு. ஐயரும், பூரீ அரவிந்தரும் தக்க சமயத்தில் புதுச்சேரி வந்து சேர்ந்திருக்க முடியுமா? ஐயர் 1910 அக்டோபர் இறுதியிலும் பூரீ அரவிந்தர் 1911 ஏப்ரல் தொடக்கத்திலும் புதுச்சேரியை அடைந்தனர்.
பத்திரிகை முயற்சிகள் ஒய்ந்த பிறகு பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய சிறந்த இலக்கியங்களை உண்டாக்குவதில் பாரதியார் முக்கியமாக ஈடுபடுகிரு.ர்.
புதுச்சேரி விட்டுக் கடயம் வந்த பிறகு அமிர்தம் என்ற பத்திரிகை தொடங்க முயல்கிறார். இம்முயற்சி வெற்றி பெறவில்லை. பிறகு மீண்டும் சுதேச மித்திரனில் உதவியாசிரியராகி மறையும்வரை பணி செய்கிரு.ர்.