பக்கம்:பாரதித் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வந்தேமாதரம்

28 டிசம்பர் 1905 விசுவாவசு மார்கழி 14

திருவல்லிக்கேணியில் பிரசுரமாகும் சக்கரவர்த்தினி என்ற மாதாந்தரப் பத்திரிகையில் அத்ன் ஆசிரியர் மிஸ்டர் சி. சுப்பிரமணிய பாரதியாரால் வரையப்பட்டிருப்பது.

இப்போது பெங்காள மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவ்ாலும் ஸாம கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தே மாதரம் என்ற திவ்ய கீதத்தை நான் மொழி பெயர்க்கத் துணிந்தமை, கர்வங்கொண்ட செய்கை யென்று பலர் கருதக்கூடும். டிெ கீதமெழுதிய பெங்காளி வித்வாளுகிய பங்கிம் சந்திர பாபுவின் தைவிகச் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மையில்லாவிடினும் தமிழ்நாட்டா ருக்கு அச் செய்யுளின் பொருளுணர்த்த வேண்டு மென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன். இவ் வந்தேமாதரம் என்ற கீதம் பங்கிம் சந்திர சாடர்ஜியின் நூல்களிலே மிகச் சிறப்புக் கொண்டதாகிய ஆனந்த மடம் என்ற நாவல் கதையினிடையே அமைக்கப்பட்டிருக் கின்றது.

ஆனந்த மடம் என்ற கதையானது உண்மை யாகவே நடந்த சரித்திரத்தைத் தழுவியது. வாரன்